கோவையை தாக்கியதா நிலநடுக்கம்? நடந்தது என்ன? அதிர்ச்சியில் மக்கள்!



Earthquake in Coimbatore

நில நடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என இந்தோனேசியாவை கடுமையாக தாக்குகிறது இயற்கை. இதுவரை 100 க்கு மேற்பட்டோர் இறந்துவிட்டனர். மக்கள் பலரும் தங்க இடம் இல்லாமல், உன்ன உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி இந்தியாவை தாக்குமோ என்ற அச்சம் பலரிடம் காணப்படுகிறது. இந்நிலையில் கோவை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சற்றுமுன்னர் கோவை அன்னூர் பகுதியில் பலத்த சத்தத்துடன் இடி இடித்துள்ளது இந்த இடியின் அதிர்வால் சுமார் எட்டு வினாடிகள் நிலத்தில் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

earth quake

இடியினால் ஏற்பட்ட இந்த அதிர்வை நில நடுக்கம் என நினைத்து பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனால் கோவை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அன்னூர் பகுதியில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை என்றும், இடியினால் அந்த பகுதி அதிர்ந்துள்ளது என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.