#Breaking: பல்லடத்தை பதறவைத்த கொலை.. "குற்றவாளிகளின் சொர்க்கபூமி" - எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.!



Edappadi Palanisamy Condemn DMK Govt on Palladam 3 of Family members Murder case

பல்லடத்தில் நடந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சியின் குறைபாடே காரணம் என தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், சேமலைக்கவுண்டன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தெய்வசிகாமணி. இவரின் மனைவி அலமாத்தம்மாள். தம்பதிகளின் மகன் செல்வகுமார், ஐடி ஊழியர். விவசாயத் தோட்டத்தில் வசித்து வந்த விவசாய தம்பதிகள், அவர்களின் மகன் ஆகியோர் நேற்று மர்ம நபர்களலால் கொலை செய்யப்பட்டனர். 

இவர்கள் நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. 

இதையும் படிங்க: #JustIN: அதிமுக நிர்வாகிகள் களஆய்வு கூட்டத்தில் மோதல்.. முன்னாள் அமைச்சர் முன்னிலையில் சம்பவம்.!

எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

இதனிடையே, இப்படுகொலை சம்பவத்திற்கு தமிழக அரசின் ஆட்சி குறைபாடு காரணம் என கூறியுள்ள எதிர்க்கட்சித்தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy

ஆட்சி இருக்குதா? இல்லையா?

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், "இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?" என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன.

குற்றவாளிகளின் சொர்க்கபூமி

தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் முக ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.


 

இதையும் படிங்க: முன்விரோதத்தில் அதிமுக நிர்வாகி படுகொலை; சிவகங்கையை அதிரவைக்கும் சம்பவம்..!