மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானை... விவசாயி கைது.! கவனக்குறைவு தான் காரணமா?...!
விவசாய நிலத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைத்ததில், யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகாமையில் நல்லாம்பட்டி கிராமத்தற்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக யானை ஒன்று தண்ணீருக்காக புகுந்துள்ளது. அப்போது அங்குள்ள சீனிவாசன் என்பவரது விவசாய நிலத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.
இதனைக் கண்ட கிராம பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினரிடம் தகவல் அளித்ததை தொடர்ந்து, அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில், சீனிவாசன் சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தது தெரியவந்தது.இதனால் மாரண்டஹள்ளி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அத்துடன் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக வனச்சரகர் உள்ளிட்ட 3 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அனுமதியின்றி விவசாயிகள் பலரும் மின்வேலி அமைத்து வருவதாகவும், இதனால் வன விலங்குகளுக்கு பெரும்பாதிப்பு ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின கவனக்குறைவு தான் இதற்கு காரணமா? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.