சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
ஆன்லைன் ஆர்டருக்கே விபூதியடித்த தம்பதி.. ரிட்டன் பெயரில் களவாணித்தனம்..! கணவன் - மனைவி பரபரப்பு செயல்.!
ஆர்டர் செய்த நிறுவனம் தான் வழக்கமாக வாடிக்கையாளரை ஏமாற்றி வந்தது, ஆனால் இங்கு அந்த நிறுவனத்தையே அதிரவைக்கும் சம்பவம் நூதன முறையில் அரங்கேற்றப்பட்டு தோல்வியை சந்தித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, வேலம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவரின் மனைவி ராதிகா. கார்த்திக் சமீபத்தில் ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச், ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் உட்பட 3 பொருட்களை வாங்க, ஈரோட்டில் உள்ள சங்கு நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்துள்ளார்.
சம்பவத்தன்று, அந்நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்த நவீன் என்பவர் கார்த்திக்கின் ஆர்டரை டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது, கார்த்திக்கின் மனைவி வீட்டில் இருந்த நிலையில், நவீன் அவரிடம் கார்த்திக் மனைவி ராதிகாவிடம் பொருட்களை ஒப்படைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, 30 நிமிடம் கார்த்திக்கிடம் டெலிவரி செய்யும் நபர் பேசிய நிலையில், கார்த்திக்கின் 3 பார்சலில் ஒரு பார்சலை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி 2 பார்சலை நவீனிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். மேலும், ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த இயலவில்லை என்பதால், பார்சலுக்கான தொகையாக ரூ.546 ஐ நாளை செலுத்தி பிற பொருட்களையும் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதனால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் டெலிவரி ஊழியர் நவீனும் திகைத்த நிலையில், பார்சலின் எடை அதிகளவு இருப்பதை கவனித்துள்ளார். இதுகுறித்து கார்த்திக்கிடம் கேட்டபோது, எனக்கு ஏதும் தெரியாது. நீங்கள் டெலிவரி செய்தது தான் என கூறி மனைவியை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.
சந்தேகம் தீராத டெலிவரி ஊழியர் நவீன், பிற டெலிவரியை முடித்துவிட்டு இரவில் அலுவலகத்திற்கு வந்து நடந்ததை மேலிட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவே, அவர்கள் பார்சலை திறந்து பார்த்தபோது ஆப்பிள் வாட்ஸுக்கு பதிலாக சாதாரண வாட்சும், மடிக்கணினிக்கு பதிலாக மரக்கட்டையும் வைக்கப்பட்டு இருந்தது உறுதியானது.
மாற்று பொருட்களை கையில் எடுத்தவாறு நிறுவன ஊழியர் கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றபோது, முரணான பதில் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மலையம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கனவே ராதிகா மோசடி வழக்கில் கைதானது அம்பலமானது.
அவரிடம் நடந்த விசாரணையின் பேரில் கணவன் - மனைவியாக நூதன திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. கார்த்திக் தலைமறைவாகியுள்ள நிலையில், அவருக்கு வலைவீசப்பட்டுள்ளது. தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கார்த்திக், மனைவி ராதிகாவுடன் சேர்ந்து நூதன மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது சிக்கியுள்ளனர்.