மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாட்டு வெடிகுண்டு வீசி காலி பண்ணிடுவேன் - காவலர்களுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் அதிரடி கைது.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலீம், புதுவடவள்ளி சமத்துவபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது, குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வாலிபர் நின்றுகொண்டு இருந்த நிலையில், காவல் அதிகாரியை பார்த்ததும் அவர் தப்பியோடியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த காவல் ஆய்வாளர் சலீம் இளைஞரை விரட்டி சென்ற நிலையில், அவர் வனப்பகுதிக்குள் நுழைந்து தலைமறைவானார். பின்னர், இருசக்கர வாகனத்தை சோதனை செய்கையில், அதில் வனவிலங்கை வேட்டையாடும் 7 அவுட்காய்கள் இருந்துள்ளது. இதனால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பான விசாரணையில் தப்பி சென்றது, அதே பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி என்பவரின் மகன் ஜெயபாலன் (வயது 21) என்பது தெரியவந்தது. இதனால் ஜெயபாலனின் மீது வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இதனைப்போல, கடம்பூர் காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் இருட்டிபாளையம், எக்கத்தூர், பசுவனபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, அனக்கரை பகுதியில் ரெங்கன் என்பவரின் மகன் முருகேசன் (வயது 29) அதிகாரிகள் கண்டு ஓட்டம் பிடித்தார்.
சுதாரித்த அதிகாரிகள் முருகேசனை பிடிக்க விரட்டவே, அருகில் வந்தால் நாட்டு வெடிகுண்டு வீசி அனைவரையும் கொலை செய்திடுவேன் என மிரட்டியுள்ளார். அதிகாரிகள் சுதாரிப்புடன் செயல்பட்டு முருகேசனை அதிரடியாக கைது செய்தனர்.