மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஷக்காளானின் விபரீதம் தெரியாமல் சமைத்து சாப்பிட்ட குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்; மக்களே கவனம்,!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், தத்தப்பள்ளி கலைஞர் தெருவில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 38). மனைவி பிருந்தா (வயது 35).
தம்பதிகளுக்கு 2 வயதுடைய ஆன் குழந்தை இருக்கிறது. கணவன் - மனைவி இருவரும் விவசாய கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று இரவு நேரத்தில், தம்பதிகள் இரவில் வேலையை ம்டுய்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அச்சமயம், பிருந்தாவின் தோட்டத்தில் மொட்டு காளான்கள் மழையினால் விளைந்திருந்ததாக தெரியவருகிறது.
இதனை குடும்பத்தினர் சமைத்து சாப்பிட்ட நிலையில், காளானை சாப்பிட்ட சிலமணிநேரத்தில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர்.
விஷயம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவலை தெரிவிக்க, அவர்கள் விரைந்து செயல்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் குடும்பத்தினரை சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக சத்தியமங்கலம் காவல் துறையினரும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், விஷத்தன்மை கொண்ட காளானின் விபரீதம் தெரியாமல் சாப்பிட்டதே மயக்கம்-வாந்திக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.