மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகாரன்கள் ஓய்வெடுக்கும் கூடாரமாக "தாய்மார்கள் பாலூட்டும் அறை"?..!
பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளதால் கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் அவதியடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியூரில் வசித்து வரும் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் தங்களின் சொந்த ஊரான தாளவாடிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் இளைப்பாறவும், குழந்தைகளுக்கு பாலூட்டவும் கட்டப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறையானது, கடந்த சில நாட்களாகவே குடிகாரர்கள் வசம் சென்றுள்ளது. இதனால் குடித்துவிட்டு அங்கேயே அவர்கள் உறங்கி வருகின்றனர்.
வெளியூரில் இருந்து பயணம் செய்து வரும் பெண்கள், கைக்குழந்தையுடன் வந்து அவர்களுக்கு பாலூட்டி இளைப்பாற இயலாமல் போனதால் பலரும் அவதியுற்றனர். இந்த விஷயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.