திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆதி திராவிட சிறு-குறு விவசாயிகளுக்கு கூடுதல் விவசாய மானியம் அறிவிப்பு - பட்ஜெட்டில் அதிரடி காண்பித்த அரசு.!
எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு மண்டலம் அமைக்கப்படும். தென்னை நாற்று பண்ணைகளில் கூடுதல் உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், 2023 - 24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பேசியவை பின்வருமாறு,
எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு மண்டலம் அமைக்கப்படும். உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குமாரி, செங்கோட்டை உட்பட தென்னை நாற்று பண்ணைகளில் கூடுதலாக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்ய நவடிக்கை எடுக்கப்படும்.
ஆதி திராவிட சிறு-குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 % மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பயிர் காப்பீடு மானியத்திற்காக ரூ.2337 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மின்னணு வேளாண் திட்டத்தின் கீழ் 335 வட்டார வேளாண் அலுவலகங்கள் மின்னணு சேவையை வழங்கும் அளவு தரம் உயர்த்தப்படும். உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை மேம்படுத்த 4 கிராமத்திற்கு ஒரு வேளாண் அதிகாரி நியமனம் செய்யப்படுவார்.