மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
கொழுந்து விட்டு எரிந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.! ஓட்டம் பிடித்த அதிகாரிகள்..!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென்று தீ பற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கம்போல மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலும் கோரிக்கையை நிறைவேற்ற கோரி மனுக்களை ஆட்சியரிடம் அளிப்பதற்காக அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் பகல் 12 மணி அளவில் மூன்றாவது தளத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்றாவது தளத்தில் தான் கேபிள் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளது இதில் தான் தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மின் கசிவு காரணமாக தீயானது அறை முழுவதும் பரவி மிக வேகமாக கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. இதனால் அலுவலகத்தில் உள்ள மூன்று தலங்களிலும் வேலை செய்து கொண்டிருந்த அலுவலர்கள் வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேற தொடங்கினார்கள்.
மேலும் வெளியே காத்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அதிகாரிகள் என அனைவரும் ஓட்டம் பிடித்தனர். பின்னர் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்து தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தீயணைக்கப்பட்ட போதிலும் மடிக்கணினிகள், கணினிகள் போன்றவை எரிந்து நாசம் ஆகியுள்ளது.