தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
போக்குவரத்து போலீசார் இனி லஞ்சம் எப்படி வாங்க முடியும்? போலீசார் சட்டையில் கேமரா பொறுத்த காவல் துறை முடிவு
இன்று வாகனத்தில் செல்லும் அனைவருக்கும் இருக்கும் ஒரே அச்சம், எந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் தன்னை வழிமறிப்பர் என்று தான். அணைத்து சான்றுகளும் சரியாக இருந்தாலும் எதாவது ஒரு காரணத்தை சொல்லி நம்மிடம் பணத்தை பறித்துவிடுவார்கள்.
இதனால் வாகன ஓட்டிகள்- போலீசார் இடையே தகராறு சம்பவம் மற்றும் லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் பெரிதும் அரங்கேறிவருகின்றன. இவ்வாறு போலீசார் மீது எழும் புகார்களை தடுக்கவும், போலீசாரிடம் தகராறு செய்பவர்களை கண்டறியவும் போலீசார் சட்டையில் கேமரா பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த சென்னை காவல் துறை முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து போலீசார் மீது எழும் புகார்களை தடுக்கவும், போலீசாரிடம் தகராறு செய்பவர்களை சுலபமாக கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என்றும் முதல் கட்டமாக 200 கேமராக்கள் ரூ.1.50 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கேமராக்கள் தொடர்ந்து 8 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. 120 டிகிரி கோணத்தில் காட்சிகளை பதிவு செய்ய முடியும்.
கேமராக்கள் முதலில் இணைய தள வசதியின்றி அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தில் மினிசர்வர் உருவாக்கப்படுகிறது. இதன் பிரதான சர்வர் வேப்பேரியில் உள்ள போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் செயல்படும்.
கேமராவில் பதிவாகும் காட்சிகள் மினி சர்வர்கள் மூலம் பிரதான சர்வருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு கேமராவில் இருந்தே இணைய தளம் மூலம் பிரதான சர்வருக்கு காட்சிகளை அனுப்பப்படும். இந்த காட்சிகளை அதிகாரிகள் நேரிடையாகவே பார்க்க முடியும்.
கேமராவை போலீசார் தன்னிசையாக ஆப்செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்சம் வாங்குவதற்காக கேமராவை ஆப் செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவிற்கு பிறகாவது சாலைகளில் நிம்மதியாக பயணம் செய்யலாமா என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்திருக்கின்றனர்.