53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
நேற்றும் - இன்றும்.. போர்க்கால அடிப்படையில் அரசு இயந்திரம்: அதிகாரிகளை பாராட்டும் சைலேந்திர பாபு.!
சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகள் மிக்ஜாங் புயலின் காரணமாக வெள்ளத்தில் மிதந்து வருகிறது. போர்க்கால அடிப்படையில் நீர் வெளியேற்றப்பட்டு, மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தினை, அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அகற்றி வருவதை ஊக்குவிக்கும்பொருட்டு, முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபுவும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "முகப்பேர் பகுதியில் நேற்று காலை இருந்த நிலவரம். புயல் போன்ற இயற்கை பேரிடரை நம்மால் தடுக்க இயலாது. அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் நம்மிடம் உள்ளது.
நேற்று காலை நீருடன் இருந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று அவை சீரமைக்கப்ட்டுள்ளன. புயலின் வீரியத்தில் இருந்து நாம் பலவற்றை கற்றுக்கொண்டு, கவனத்துடன் செயல்பட வேண்டும்" என கூறியுள்ளார்.
வீடியோ இணைப்பு: https://www.facebook.com/reel/736151297943875