கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கஜா பாதிப்பு: எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு நிவாரண தொகை? முழுவிவரம் உள்ளே
கடந்த சில நாட்களாக கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கிறது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல், கடலூர். இந்த புயலால் பல விவசாய நிலங்கள், மரங்கள், ஆடு, மாடு அனைத்து அழிய, மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். பலரின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.
முதல் 5 நாட்கள் மக்கள் எந்தவித நிவாரண உதவிகளும் பெறாமல் தவித்து வந்தனர். தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் அவர்கள் படும் இன்னல்களை வெளிஉலகிற்கு சொல்லமுடியாமல் தவித்தனர். 5 நாட்களுக்கு பிறகு இப்பொது தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிகள் கிடைத்துவருகின்றன.
இந்த கஜா புயலால், அதிராம்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னைமரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்துவிட்டன. அவைகளில் பெரும்பாலான மரங்கள் 20 முதல் 30 வருடங்கள் பழமையானவை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இனிமேல் இதை போன்ற மான்களை நட்டு வளர்ப்பதென்பது சாதாரண விஷயம் அல்ல என கதறுகின்றனர் விவசாயிகள்.
அதே போல், அறந்தாங்கி, கீரமங்கலம், ஆண்வயல், ஆவணம், கைகாட்டி, மாங்காடு, வடகாடு பகுதிகளில் பலா மற்றும் மா மரங்கள் அதிகமாக வளர்க்கப்பட்டன. பல வருடங்களாக அந்த பகுதி விவசாயிகளுக்கு வருமானத்தை அளித்து வந்த அந்த மரங்கள் அனைத்தும் கஜா புயலுக்கு இறையாகிவிட்டன. இன்னும் குரைந்தது 5 வருடங்களுக்கு அந்த விவசாயிகள் எந்த வருமானமும் பார்க்க முடியாது என்பது தான் கவலைக்கிடமான ஒன்று.
மேலும் ஆலங்குடி, கந்தர்வகோட்டை, ஆதன்கோட்டை, மலையூர், மாகோட்டை பகுதிகளில் வாழை, மற்றும் முந்திரி மரங்கள் அதிகமாக பயிரிடப்பட்டு இருந்தன. பல வருடங்களாக வருமானம் அளித்து வந்த முந்திரி மரங்கள் அனைத்தும் இன்று வேரோடு பிடுங்கி வீசப்பட்டு கிடக்கிறது. மீண்டும் முந்திரி பயிர்களை பயிரிட்டு வருமானத்தை பார்க்க குறைந்தது 3 முதல் 4 வருடங்கள் ஆகும்.
இந்நிலையில், தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்கள் நிலங்களில் இருந்த பயிர்களுக்கு ஏற்றவாறு நிவாரண நிதிகளை ஒதுக்கியுள்ளது. அதற்கான முழு அட்டவணையும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
மேலும் சேதமடைந்த பகுதிகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த அரசு அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியை சேர்ந்த அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றிய தகவலை தெரிவித்து பயனடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.