இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
வினையான விபரமறியா விளையாட்டு.. எர்த் கம்பியால் 6 வயது சிறுமி, மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி.! பெற்றோர்களே உஷார்.!!

விளையாட்டு ஆர்வத்தில் 6 வயது சிறுமி, மின்சார இணைப்பு வயரின் துணைக்கம்பத்தை பிடித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அருகாமையில் குணசீலம் ஊராட்சி, மஞ்சக்கோரை பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜா- வனிதா தம்பதியினர். இவர்களின் இளைய மகளான வேதவர்ஷினி (வயது 6). இந்த சிறுமி ஏவூர் அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்துள்ளார்,.
இந்த நிலையில், நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் வேதவர்ஷினி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த மின்சார இணைப்பு ஒயரின் துணைக்கம்பமான இரும்பு குழாயை விளையாடிக் கொண்டே சென்று தெரியாமல் பிடித்துள்ளார்.
விளையாட்டு ஆர்வத்தில் சிறுமி பிடித்த இரும்பு குழாய் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுமி வேதவர்ஷினியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.