தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சீருடையில் தனியாரை மிஞ்சும் அரசு பள்ளி! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு
அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு நான்கு வகையான சீருடைகள் வரும் கல்வியாண்டில் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழகத்தகல் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. பெற்றோர்களும் தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என பிள்ளைகளை அங்கேயே சேர்க்கின்றனர். இதனை முறியடிக்கும் விதமாக தற்போதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின். 102 ஆவது பிறந்தநாளையொட்டி, கோபி 19வது வட்டத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பரிசு வழங்கினார். பின்னர் பேசிய அவர், அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மற்றும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் 4 விதமான சீருடைகள் வழங்கப்படும் என அறிவித்தார்.