பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆடுகளை துரத்தித்துரத்தி கடித்த வெறிநாய்கள்.. 15 ஆடுகள் பரிதாப பலி.. கண்ணீரில் விவசாயி.!
பட்டியில் இருந்த ஆடுகளை நாய்கள் கூட்டாக சேர்ந்து துரத்தி கடிதத்தில் விவசாயிக்கு கண்ணீர் சோகம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு, தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன், விவசாயி. இவர் தனது வீட்டிலேயே பட்டி அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று ஜானகிராமனின் ஆடுகளை நாய்கள் கூட்டாக சேர்ந்து தாக்கி இருக்கின்றன. இந்த சம்பவத்தில் 15க்கும் மேற்பட்ட ஆடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜானகிராமன் வளர்த்து வந்த 15 ஆடுகள், நாய்க்கடியின் வீரியத்தால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் ஜானகிராமன் மற்றும் அவரின் குடும்பத்தினர் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.