மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆபரணத்தங்கத்தின் விலை திடீர் உயர்வு.. ஆயுதபூஜையன்று மூழ்கிப்போன இல்லத்தரசிகளின் ஆசை..!!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து இல்லத்தரசிகளை சோகத்தில் மூழ்கச்செய்துள்ளது.
தங்கத்தின் விலையானது கடந்து சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.38,200க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.4775க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4.20 உயர்ந்து ரூ.66.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரேநாளில் ஆபரணதங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்துள்ளதால் ஆயுதபூஜையன்று தங்கம் வாங்கலாம் என்ற இல்லத்தரசிகளின் ஆசை மூழ்கிப்போனது.