தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அட்சய திருதியை முன்னிட்டு ஆன்லைனில் விற்பனையாகும் தங்கநகைகள்..!
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்குப்பின் வளர்பிறையில் வரும் மூன்றாவது நாள் அட்சய திருதி என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு அமலில் உள்ளதால் நகைக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் தங்கநகைகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர். மக்கள் தங்களுக்கு விருப்பமான தங்கநகைக்கடையின் இணையத்தளத்திற்கு சென்று முன்பு பதிவு செய்து கொள்ளலாம். தங்கத்தை ஆடர் செய்து பணத்தை ஆன்லைனிலேயே செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்த பிறகு எந்த கடையில் முன்பதிவு செய்தார்களோ அங்கு சென்று தங்ககாசை பெற்று கொள்ளலாம். இல்லையென்றால் நகையாக அதற்குரிய செய்கூலி மற்றும் சோதாரத்தை பெற்று வாங்கி கொள்ளலாம்.