ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு இவ்வளவு செலவா? வெளியான அதிர்ச்சி தகவல்.!



govt spent one crore to jayalalitha funeral

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்குக்காக தமிழக அரசு ரூ.1 கோடி செலவு செய்தது தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் சையது தமீம், ஜெயலலிதா மறைவு தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் பொது தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு பல கேள்விகளை எழுப்பி கடிதம் எழுதியிருந்தார்.
 
அதில் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்காக தமிழக அரசு எவ்வளவு செலவு செய்தது? என்ற கேள்விக்கு ‘தமிழக அரசு எந்த செலவையும் செய்யவில்லை’ என அதிகாரிகள் பதிலளித்தனர்.
 
அதேபோல், அவரின் இறுதிச்சடங்கிற்கு அரசு எவ்வளவு செலவு செய்தது என அவர் எழுப்பிய கேள்விக்கு, தமிழக அரசு பொதுப்பணித்துறை சார்பில் ரூ.99 லட்சத்து 33 ஆயிரத்து 586 செலவு செய்யப்பட்டது முதல்வர் என்ற முறையில் இந்த செலவு அரசு சார்பாக செய்யப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.