இரண்டு நாட்களுக்கு பிறகு கொட்டித்தீர்க்கும் கனமழை! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை



heavy rain fall after 2 days

வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அது வட தமிழக கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அரசு நிர்வாகங்களும் புயலை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்தி வருகிறது.

மேலும் 'வங்க கடலில் உருவாகியுள்ள, 'பெய்ட்டி' புயல் சின்னம், ஆந்திரா மற்றும் தமிழக கடற்பகுதி இடையே கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

cyclone in TN

இதனால், தமிழகத்தின் பாம்பன் முதல், ஆந்திராவின் நெல்லுார் வரை, கன மழையை கொடுக்கும். குறிப்பாக, நாகை, கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களில், கனமழையை கொட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புயல் சின்னம் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

மீனவர்களை பொறுத்தவரை, வரும், 13ம் தேதி வரை, வங்க கடலின் தெற்கு, தென் மேற்கு, தென் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். கடல் அலைகள் கொந்தளிப்பாகவும், மோசமான வானிலையும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.