தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஹிஜாப் சர்ச்சையால் பூணூல் அறுப்பு போராட்டம்.. ம.ம.க ஜவாஹிருல்லா, த.மு.லீ முஸ்தபா கடும் எதிர்ப்பு.!
ஹிஜாப் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பூணூல் அறுப்பு போராட்டம் நடத்தப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சி உட்பட சில முஸ்லீம் அமைப்பு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா ஆகியோர் இது கண்டிக்கத்தக்க செயல் என்று எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அடைய தடை விதித்துள்ள பாஜக அரசை எதிர்த்து இந்துக்கள், கிருத்துவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்து மதத்தை சேர்ந்த பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு ஹிஜாப் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்கிறார்கள்.
இதைவிட முக்கியமாக ஹிஜாப் விவகாரத்தில் நமக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரில் பிராமண சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் முதன்மை நபராக இருந்தார். இதுவே சமூக நல்லிணக்கம் நிலைத்து நிற்க சாட்சியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், பூணூல் அறுக்கும் போராட்டம் என அறிவித்துள்ளது நல்லதல்ல. இது பகைமையை ஏற்படுத்தும். இதனை தொடக்கத்திலேயே தவிர்க்க வேண்டியது அவசியம். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது" என்று தெரிவித்தார்.