மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணத்தை திருப்பி தராததால்.. கள்ளக்காதலிக்கு விஷம் வைத்து கொலை செய்த காதலன்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ். இவரது மனைவி செல்வி. இதில் பசுவராஜ் பெங்களூரில் வேலை செய்து வருகிறார். வெளியூரில் வேலை செய்வதால் பசுவராஜ் தனது மனைவியுடன் தினமும் செல்போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி முதல் மனைவியின் செல் போன் சுவிட்ச் ஆப்பில் இருந்துள்ளது. இதனால் உடனடியாக பெங்களூரில் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது மனைவி வீட்டில் இல்லை. இதனையடுத்து உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் செல்வி பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் மர்மமான முறையில் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தார். மேலும் அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையை காணவில்லை.
மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு குறி கேட்க செல்வி சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பூசாரி குமாருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூசாரி குமாரிடமிருந்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை செல்வி வாங்கியுள்ளார். அந்த பணத்திற்கு பதிலாக தனது கணவரிடம் இருந்து குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். ஆனால் செல்வி வாங்கி கொடுக்கவில்லை.
கடந்த நவம்பர் 15ஆம் தேதி கோவிலுக்கு வருமாறு செல்வியை குமார் அழைத்துள்ளார். அப்போது குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து செல்வியை குடிக்க வைத்து கொலை செய்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பூசாரி குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.