இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை. மனைவியை பார்க்க சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருச்சி மாவட்டம் பிச்சம்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான்சி ராணி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் கணவன் மனைவி இருவரும் ஒருவொருக்கொருவர் அன்புடன் இருந்து வந்துள்னனர்.
இந்நிலையில் ஜான்சி ராணி தனது மாமனார், மாமியாருடன் வீட்டில் இருக்க, தர்மர் சென்னையில் ஓட்டுநராக பணியாற்றிவந்துள்ளார். மேலும், அவ்வப்போது தனது மனைவியை காண ஊருக்கு சென்று வந்துள்ளார் தர்மர். இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களில் தனது மனைவியின் வசதிக்காக வீட்டிற்குள் சிறிதாக குளியலறை ஒன்றை கட்டிட்க்கொடுத்துள்ளார் தர்மர்.
அந்த குளியலறைக்கு தனது வீட்டின் பின்புறத்தில் இருந்து மின்சாரம் எடுத்துள்ளார் தர்மர். இந்நிலையில் சமபவத்தன்று அந்த மின்சார ஒயருக்கு அருகில் காய வாய்த்த துணியை எடுக்க சென்றுள்ளார் ஜான்சி ராணி. அப்போது எதிர்பாராத விதமாக ஜான்சி ராணி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. தனது மனைவியை காப்பற்ற தர்மர் சென்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலையே உயிர் இழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.