#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சொந்த ஊரில் தங்க நினைத்த தொழிலாளி: மனைவி சொன்ன பதிலால் நிகழ்ந்த சோகம்..!
சேத்தியாதோப்பில் மனைவியுடன் ஏற்பட்ட தகறாரில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கோவிந்தராஜன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). தச்சு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
ஈஸ்வரி தனது குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதியாக சேத்தியாத்தோப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். சொந்த ஊரான கோவிந்தராஜன் பேட்டையில் தச்சு வேலை செய்து வரும் சரவணன், தினமும் சேத்தியாத்தோப்பில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த 4 ஆம் தேதி இரவு குடிபோதையில் தொலைபேசியில் மனைவியிடம் தொடர்பு கொண்டு பேசிய கோவிந்தராஜன், சொந்த ஊரான கோவிந்தராஜன் பேட்டையில் தங்கி விடுவோம் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு அவரது மனைவி ஈஸ்வரி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சரவணன், தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரவணன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் சோழத்தரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.