மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பத்து ரூபாய்க்காகவா.?" தலையில் கல்லைப் போட்டு மீனவர் கொலை... சென்னை அருகே பயங்கரம்.!
மது குடிக்க பணம் தராததால் மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
சென்னையை அடுத்த நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். மீனவரான இவர் மனைவி மற்றும் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று நெட்டுக்குப்பம் கடற்கரையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார் ரஞ்சித். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். காவல்துறையினர் நடத்திய துரித விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தான் ரஞ்சித்தை கொலை செய்தார் என்று தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ள கோவிந்தராஜ் ரஞ்சித்துடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது மேலும் மது குடிப்பதற்காக அவரிடம் 10 ரூபாய்க்கு கேட்டிருக்கிறார். அதற்கு ரஞ்சித் மறுத்ததால் ஆத்திரத்தில் மற்றும் மது போதையில் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.