கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
இரயில் மோதி வயோதிக தம்பதி பலி., இராமேஸ்வரம் செல்ல முயன்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.!
மறைமலை நகர் இரயில் நிலையத்தில் வயோதிக தம்பதி இரயில் மோதி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர், நின்னகரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில் வேளாண் (வயது 82). இவரின் மனைவி பசும்பொன் (வயது 71). இருவரும் நவம்பர் 04ம் தேதி அன்று இரவில், ராமேஸ்வரம் செல்ல செங்கல்பட்டுக்கு சென்று இரயில் ஏற, மறைமலை நகர் இரயில் நிலையம் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்து 2 வயது சிறுவன் பலி; அலட்சியத்தால் நேர்ந்த சோகம்.. குடும்பமே கண்ணீர்.!
தண்டவாளத்தை கடந்தபோது சோகம்
இரயில் நிலையத்தில், தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கீழே இருந்து கடக்க முயற்சித்ததாக தெரியவருகிறது. அச்சமயம், அவ்வழியே பல்லவன் விரைவு இரயில் வந்த நிலையில், அதனை தம்பதிகள் கவனிக்கவில்லை. இதனால் வேகமாக வந்த பல்லவன் இரயில் மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இருவரும் பலி
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் இரயில்வே காவல்துறையினர், தம்பதிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தம்பதிகளின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BigNews: மேல்மருவத்தூர்: குற்றவாளியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் பயணம்; உதவி ஆய்வாளர் உட்பட பெண் காவலர்கள் இருவர் பரிதாப பலி.!