"எரிச்சி கொன்னுட்டோம்" - 7 ஆண்டுகளாக மாயமானவர் வழக்கில் பகீர் திருப்பம்; பரபரக்க வைக்கும் தகவல்.!



in-chennai-man-missing-case-ends-now-he-murdered-before

 

கடந்த 7 ஆண்டுகளாக மாயமானதாக கூறப்பட்டவர் ரௌடி மற்றும் அவரின் வழக்கறிஞர் நண்பரால் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.

 

சென்னையைச் சேர்ந்த பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான பாம் சவரணன், சமீபத்தில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தபோது அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் சென்னை அழைத்து வரப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: வீட்டுக்குள் புகுந்த ரௌடியை தீர்த்துக்கட்டிய 6 பேர் கும்பல்; சென்னையில் பயங்கரம்.!

இதனிடையே, அவர் அளித்த பல வாக்குமூலங்கள் திடுக்கிடும் தகவலை வெளிக்கொணர்ந்துள்ளது. அதாவது, கடந்த 2018ம் ஆண்டு பன்னீர்செல்வம் என்பவர் மாயமானனார். இவரை கடந்த 7 ஆண்டுகளாக காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே, மாயமான செல்வத்தை சரவணன் எரித்துக்கொன்றதாக வகைக்குமூலம் அளித்து இருக்கிறார். 

chennai

மாயமானவர் வழக்கில் திருப்பம்

தென்னரசு என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர் செல்வத்தை, தானும், தனது நண்பரான வழக்கறிஞர் ராஜேஷ் என்பவருடன் சேர்த்து கொலை சம்பவத்தை நடத்தியதாக கூறி இருக்கிறார். இ

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர், வழக்கறிஞர் ராஜேஷிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த தகவல் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக பன்னீர் செல்வம் மாயமானதாக கூறப்பட்ட விவகாரத்தில், திருப்பம் ஏற்பட்டு, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சுடுதண்ணீரில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுமி; சென்னையில் சோகம்.!