#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
சென்னை: பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 15 வயது சிறுமி: வீடியோ எடுத்து சம்பாத்தியம் பார்த்த பெற்றோர்.!
தங்களின் சொந்த மகளை பெற்றோர் பாலியல் தொழிலில் தள்ளி, அதனை வீடியோ எடுத்தும் விற்பனை செய்து சம்பாத்தியம் பார்த்த மிகப்பெரிய அவலம் சென்னையில் நடந்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை, பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் ஒன்றாக இந்தியாவில் இருக்கிறது. இதனிடையே, சென்னையில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, அண்ணா நகரில் 10 வயது சிறுமி பலாத்கார வழக்கில் அரசியல் புள்ளியின் தலையீடு, ஐஐடி மாணவிக்கு கேண்டினில் பாலியல் தொல்லை, அயனாவரத்தில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவி பலாத்காரம் என பல கொடுமை சமீபத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வீட்டுக்குள் புகுந்த ரௌடியை தீர்த்துக்கட்டிய 6 பேர் கும்பல்; சென்னையில் பயங்கரம்.!
சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடுமை
இந்நிலையில், சென்னையில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமியை, பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி தகவல் அம்பலமாகி இருக்கிறது. சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர், அதனை வீடியோ எடுத்து வைத்தும் விற்பனை செய்து பணம் சம்பாதித்து இருக்கின்றனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரின் விசாரணையில் உண்மை அம்பலமாகவே, அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தாய்-தந்தை இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்களின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை: கணவனுக்கு செருப்படி.. கள்ளகாதலருடன் வந்த மனைவியை நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவர்.!