பிரியாணியில் பூச்சி?.. இன்ஸ்டாகிராமில் வீடியோ ரிலீஸ் செய்த இளைஞர்.. சிசிடிவியில் ஷாக் உண்மை.! 



  in coimbatore gandhipuram hotel name spoiled by youth 

துரித உணவகங்கள் மீதான மோகம் இன்றளவில் அதிகரித்துவிட்ட நிலையில், சிலர் தினமும் அதனை நம்பியே வாழவும் செய்கின்றனர். இவ்வாறான துரித உணவகத்தில் தயார் செய்யப்படும் உணவுகளில், சிலநேரம் பூச்சி போன்றவை விழுந்து மனிதர்களுக்கு உடல்நல பாதிப்பும் ஏற்படுகிறது. 

அதேநேரத்தில், இன்றைய தொழில்நுட்ப உலகில் புகார்கள் உடனுக்குடன் உணவுப் பாதுகாப்புத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதால், உணவகமும் இயன்றளவு சுத்தமான உணவுகளை கொடுக்க நடவடிக்கை எடுக்கிறது. புற்றீசல் போல வளர்ந்துள்ள துரித உணவகத்தில், தரமான உணவகமும் இருக்கின்றன. 

பிரியாணியில் பூச்சி?

இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உணவில் பூச்சி கிடந்ததாக ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் சொல்லி, உணவகத்திற்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டது அம்பலமானது. கோவை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Watch: நெஞ்சமெல்லாம் பதறுதே.. நொடியில், அண்ணன் கண்முன் தங்கை தலைநசுங்கி மரணம்..!

ஊழியர்களிடம் சண்டை

அங்கு சம்பவத்தன்று உணவு சாப்பிட வந்த தம்பதி, பிரியாணி ஆர்டர் செய்துள்ளது. அவர்களுக்கு பிரியாணியும் வழங்கப்பட்ட நிலையில், சாப்பிடும்போது அதில் பூச்சி கிடந்ததாக வீடியோ எடுத்து, கடை ஊழியர்களிடம் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். 

சிசிடிவியில் உண்மை அம்பலம்

மேலும், சாப்பிட்ட உணவுக்கும் பணம் தராமல் அங்கிருந்து சென்றுள்ளார். பின் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார். இதனால் சந்தேகம் கொண்ட ஊழியர்கள், கடையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஜோடி திட்டமிட்டு உணவில் பூச்சி கலந்து பிரச்சனை செய்தது தெரியவந்தது.

இந்த விஷயம் தொடர்பாக உணவக நிர்வாகத்தினர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: பட்டப்பகலில்.. ரோட்டில் தோன்றிய காம ஆசை.. கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்.!