16 வயது சிறுமிக்கு பரிகாரம் செய்வதாக பாலியல் தொல்லை; பூசாரி போக்ஸோயில் கைது.!



in Dharmapuri 16 Year Old Girl Sexual Harassment 

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி. இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். மேலும், வீட்டில் வைத்து மாந்த்ரீகம் என்ற பெயரில் வருமானம் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே, அங்குள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும், பூசாரியை பார்த்து திருநீறு போட்டால் சரியாகிவிடும் என தண்டாயுதபாணியிடம் அழைத்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: மாணவிகள் சாப்பிடும் உணவில் பல்லி கலந்து நேர்ந்த சோகம்; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

Dharmapuri

பாலியல் தொல்லை

தண்டாயுதபாணி சிறுமிக்கு உடல்நலக்குறைவு மாந்த்ரீக விஷயம் காரணமாக ஏற்பட்டுள்ளது. அதற்கு பூஜை செய்ய வேண்டும் என கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். 

இதனையடுத்து, அவர்கள் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தண்டாயுதபாணியை கைது செய்தனர். 
 

இதையும் படிங்க: டூவீலரில் அசால்ட்டா ரைடு போறிங்களா? உசுரே போச்சு.. தனியார் பேருந்து மீது மோதி இளைஞர்கள் 2 பேர் பலி.!