திருவள்ளூர்: ஒன்றரை வயது குழந்தையை கடித்துக்குதறிய வெறிநாய்; பெற்றோர்களே கவனம்.. அலட்சியம் வேண்டாம்.!



in Thiruvallur RK Pettai Dog Bite 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.கே பேட்டை, ஸ்ரீ கிருஷ்ணாபுரம், மூரகுப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் காயத்ரி. இவரின் கணவர் மருதநாயகம். தபதிகளுக்கு ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. மருதநாயகம் கூலித் தொழிலாளி ஆவார். 

நாய் கடித்தது

இதனிடையே, நேற்று முன்தினம் இரவில் காயத்ரி குழந்தையை வீட்டு முன்னால் விட்டு, மாடு கட்ட சென்றுள்ளார். அச்சமயம், அங்கு வந்த வெறிநாய் ஒன்று, ஒன்றரை வயதுடைய குழந்தை வெற்றிவேலை கடுமையாக கடித்தது. 

thiruvallur

File Pic | Dog

மருத்துவமனையில் சிகிச்சை

இதனால் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த காயத்ரி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வெறிநாயை விரட்டினார். உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: தவணைத்தொகையை வாங்கி செலவழித்த நபர்; கேள்விக்கு பயந்து தற்கொலை.. தவிக்கும் காதல் மனைவி.!

இதையும் படிங்க: சாப்பிட அடம்பிடித்த பாட்டி சுத்தியலால் அடித்தே கொலை; 23 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.!