தவணைத்தொகையை வாங்கி செலவழித்த நபர்; கேள்விக்கு பயந்து தற்கொலை.. தவிக்கும் காதல் மனைவி.!



IN THIRUVALLUR TIRUTANI MAN DIES bY sUICIDE 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, பொதடுர்பேட்டை, இராமசமுத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் நாகலிங்கம். இவரின் மகன் சூர்யா (வயது 27), காய்கறி வியாபாரியகா இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, வீட்டில் இருந்து வெளியேறியவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.

இதனிடையே, அங்குள்ள காப்புக்காட்டு பகுதியில், வாலிபரின் சடலம், மரம் ஒன்றில் புடவையில் தூக்கிட்டு நிலையில் இருப்பதாக, மாடு மேய்க்கும் நபர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சுருவின் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, சூர்யா தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, தகவல் அறிந்த திருத்தணி காவல்துறையினர், சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருசக்கர வாகன தவணை விவகாரத்தில் தற்கொலை நடந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: சாப்பிட அடம்பிடித்த பாட்டி சுத்தியலால் அடித்தே கொலை; 23 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.!

thiruvallur

அதாவது, இருசக்கர வாகனத்திற்கு தவணை செலுத்த, உறவினர் சூர்யாவிடம் பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த பணத்தை வாங்கி சூர்யா செலவு செய்திடவே, இதுகுறித்து அவர் கேட்டுள்ளார். இந்த விஷயத்தில் பணத்துக்கு என்ன பதில் சொல்வது என பயந்து சூர்யா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தற்கொலை செய்துகொண்ட சூர்யா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நிரோஷா என்ற பெண்ணை காதலித்து கரம்பிடித்தார். தம்பதிகளுக்கு தற்போது வரை குழந்தை இல்லை. சூர்யாவின் மறைவு நிரோஷாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதையும் படிங்க: மகள் தற்கொலை செய்த சோகத்தால், தந்தையும் விபரீத முடிவு.. படிக்க சொன்னது குத்தமா?