திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருவாரூர்: பிரசவம் முடிந்ததும் மரணம்.. பல நாட்கள் போராடி பிரிந்த உயிர்.. மருத்துவமனையில் நடந்தது என்ன?
இரத்த போக்கு காரணமாக பாதிக்கப்பட்ட பெண், உடல்நலம் தேறி வந்த நிலையில் திடீரென மரணம் அடைந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதி பர்வதம் - ஜெமீனா மேரி. தம்பதிக்கு செபஸ்டினா என்ற 35 வயதுடைய மகள் இருக்கிறார். அங்குள்ள கோவில்பத்து கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டியன்.
இதையும் படிங்க: திருவாரூர்: பெண்ணை தவறாக அழைத்து, ஊரை விட்டு ஒதுக்க திட்டம்?; கவுன்சிலரின் அடாவடி செயல்.. கண்ணீருடன் குமுறல்.!
இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களில் செபஸ்டினா கூத்தூர் கிராமத்தில் அஞ்சலக ஊழியராக வேலை பார்க்கிறார்.
பிரசவத்திற்கு அனுமதி
இவர்களுக்கு ஏற்கனவே 6 வயதுடைய குழந்தை இருக்கிறார். தற்போது இரண்டாவது முறையாக கருத்தரித்த செபஸ்டினா, கடந்த செப்.7 அன்று மேலக்கரை பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா கருத்தரிப்பு மையத்தில் பிரசவத்திற்கு அனுமதியாகியுள்ளார்.
அறுவை சிகிச்சையில் அன்றே குழந்தை பிறக்க, அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பலனின்றி பலி
முதலில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்த பெண்மணி, பின் மெல்ல உடல்நலம் தேறி இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் வீடு திரும்பலாம் என உறவினர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இதனிடையே, நேற்று பெண்மணி திடீரென மரணம் அடைந்தார். இவரின் மரணத்திற்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என உறவினர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
மேலும், அரசு மருத்துவர்கள் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை தனியார் மருத்துவர்களுடன் பகிர்ந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதியாகும் பெண்ணுக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை வழங்க உபகரணம் இல்லை என கூறுகிறார்கள் என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இந்த விஷயம் குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருவாரூர்: அரசுப்பள்ளி மாணவர்களின் வாக்குவாதம் மோதலில் முடித்தால் பரபரப்பு.. அதிர்ச்சி சம்பவம்.!