திருவாரூர்: பெண்ணை தவறாக அழைத்து, ஊரை விட்டு ஒதுக்க திட்டம்?; கவுன்சிலரின் அடாவடி செயல்.. கண்ணீருடன் குமுறல்.!



in Thiruvarur Nanilam Women Complaint Over Village and Counselor 

 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு, திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் கணவர் இயற்கை எய்திவிட்டார். இதனால் பெண்மணி தனது குழந்தைகள், தாயுடன் வசித்து வருகிறார். பெண்ணின் தம்பி உயிருடன் இருக்கும் நிலையில், அவர் இவர்களை கவனித்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

இதனிடையே, இவர்கள் வசித்து வரும் பகுதியின் கவுன்சிலராக ராஜா என்பவர் இருந்து வருகிறார். இவர் கணவரை இழந்து குழந்தைகளுடன் வசித்து வரும் பெண்ணை தவறாக அழைத்ததாக தெரியவருகிறது. இதற்கு பெண்மணி உடன்பட மறுத்துள்ளார். இதனால் அவரை கிராமத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என திட்டமிட்டனர், அவதூறுகள் பரப்பியதாக தெரியவருகிறது. 

இதையும் படிங்க: திருவாரூர்: அரசுப்பள்ளி மாணவர்களின் வாக்குவாதம் மோதலில் முடித்தால் பரபரப்பு.. அதிர்ச்சி சம்பவம்.! 

வீட்டை சூறையாடியதாக குற்றச்சாட்டு

இதனால் கிராமமே பெண்ணுக்கு எதிராக திரண்டு நிற்கும் நிலையில், அவர்கள் கிராமத்தில் நடக்கும் சுப-துக்க நிகழ்வுகளில் அவர்களை கலந்துகொள்ள விடாமல் தடுக்கின்றனர். மேலும், பெண்ணின் வீட்டை சூறையாடி இருக்கின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும், அவர்கள் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது 6 மாதங்களாக காவல்நிலையம், ஊர்மக்களிடம் போராடிப்பார்த்த பெண்மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியரும் உறுதி அளித்துள்ளார். தனது நிலையை அவர் கண்ணீர் குமுறலுடன் வெளிப்படுத்தி இருந்தார். 

வீடியோ நன்றிதந்தி தொலைக்காட்சி

இதையும் படிங்க: கந்து வட்டி தகராறு... கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்.!! காவல்துறை தீவிர விசாரணை.!!