தென்னந்தோப்பில் லேப்டாப்புடன் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள்! வேற லெவல்!



it employees work at farm

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 3000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொருத்தவரை 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பெரும்பான்மையான தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஐ.டி. ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.

IT employee

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பெங்களூரில் வேலை செய்யும் ஐடி நிறுவன ஊழியர்கள் சிலர், தங்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியதால் அவர்களின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள அவர்களது கிராமத்திற்கு சென்று தங்கள் குழுவோடு தங்கி வேலை பார்க்கிறார்கள். 

அவர்கள் அனைவரும் தேனி மாவட்டம் அனுமந்தம்பட்டி கிராமத்தில் இயற்கையான சூழ்நிலை வேலை பார்ப்பதற்கு வசதியாக தென்னந்தோப்பு ஒன்றில், செம்மண் தரையில் போர்வை விரித்து, குழுவாக இருந்து வேலை பார்க்கின்றனர். தங்களுக்கு இந்த இயற்கையான சூழ்நிலை வேலை பார்ப்பதற்கு வசதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.