பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
ஜாக்டோ ஜியோவின் அதிரடி முடிவால், மீண்டும் அதிர்ச்சியில் தமிழக அரசு.!
பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த போராட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு நிலையில், தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி கடைசி வாரத்தில் பொதுத்தேர்வுகள் ஆரம்பமாக உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களை பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மேலும் போராட்டத்தை தொடர்பவர்கள் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் எச்சரிக்கை பிறப்பித்தது. மேலும் ஆயிரக்கணக்கானோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சற்றுமுன் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது:-
போராட்டத்தில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரோடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முதல்வர் பழனிசாமி அழைத்து பேசினால் எங்கள் பிரச்னைகள் தீர்ந்து விடும் என நம்புகிறோம்.அதுவரை போராட்டம் தொடரும்.
மேலும் இன்று மாலை 3 மணிக்கு உயர்மட்டக்குழு கூட்டம் கூடவுள்ளது. அதில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.