மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரும்பு பெண்மணிக்கு இன்று பிறந்தநாள் விழா! தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மரியாதை!
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா. "தொட்டில் குழந்தைகள் திட்டம்", "பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்", பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், படித்த பெண்களுக்கு "ஊக்கத்தொகையுடன் கூடிய தாலிக்குத் தங்கம்" என ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அணைத்து திட்டங்களாலும் ஏழை மக்கள் பலர் பயனடைந்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் தமிழக முதல்வராக இருந்தார்.
வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் முன்னாள் முதல்வர் ஜெ. இதனையடுத்து 1981ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அதே ஆண்டில் கொள்கை பரபு செயலாளராகவும் இருந்தார். பின்னர் 1984ஆம் ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினரானார்.
1987இல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, 1989ஆம் ஆண்டு அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்றார். 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றுத் தமிழகத்தின் முதலமைச்சரானார். 8 முறை தேர்தல்களில் நின்ற ஜெயலலிதா ஒரே ஒரு முறை மட்டுமே தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது.