மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்! தற்போதுவரை கண்ணீர் சிந்தும் ஏழை மக்கள்!
தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக வலம்வந்த ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின், மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார்ஜெயலலிதா. பின்னர் 1982-ல் அரசியலில் தடம் பதித்தார். எதிரிகளாலேயே தைரியசாலி என ஏற்றுக் கொள்ளப்பட்டவர், 'அம்மா' என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்பட்டவர்.
இரும்புப்பெண்மணி ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில், அதிகப்படியான ஏழை மக்களை மனதில் கொண்டு செயல்படுத்திய சில முன்மாதிரி திட்டங்கள், இன்றும் அவரது வழியில் நடைபெறவதாக சொல்லப்படும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிபெற்று, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைத்து சாதனை படைத்தது. அத்துடன், 6-வது முறை முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார் ஜெயலலிதா.
உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2016 செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74 நாட்கள் தொடர்ந்து உயர் சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5 ஆம் தேதி தனது 68-வது வயதில் ஜெயலலிதா மரணமடைந்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.