கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம்.! அதிமுக வரவேற்பு.!



kalaingar memorial in merina


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று  சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல்நலக்குறைவால் கலைஞர் கருணாநிதி காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 50 ஆண்டு திமுக தலைவராகவும், 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர். தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை என புகழாரம் சூட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கட்டப்படும் நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமையும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.