மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுக்கோட்டையில் கலைஞர் சிலை.! காணொலி மூலம் திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.!
முன்னாள் தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞருக்கு, புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் சிலையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்தநிலையில் புதுக்கோட்டையில் திமுகவினர் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். கலைஞரின் சிலையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துப் பேசினார்.
அவர் பேசுகையில், 1974 -ஆம் ஆண்டு புதுக்கோட்டையை தனி மாவட்டமாக அறிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்காக புதுக்கோட்டை மன்னரின் அரண்மனையை விலைகொடுத்து வாங்கினார் கலைஞர். அதேபோல, புதுக்கோட்டை மக்களின் குடிநீருக்காக ரூ.50 கோடி கட்டி நகராட்சியை மீட்டவரும் கலைஞர்தான் என தெரிவித்தார்.