நோயாளிகளின் உதவியாளர்கள் தங்க இடம் இல்லாமல் அவதி; கோரிக்கை வைக்கும் உறவினர்கள்.!



KALLAKURICHI GOVT HOSPITAL PATIENT HELPERS REQUEST

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில், அம்மாவட்டத்தை சேர்ந்த பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் உதவிக்கு வருபவர்கள் நோயாளிகளுடன் இரவில் இருக்க அனுமதி கிடையாது. 

இதனால் அவர்கள் மருத்துவமனை வாசலில் தங்கள் கொண்டு வந்துள்ள துண்டு, சிறிய வேட்டி போன்றவற்றை விரித்து ஆங்காங்ககே படுத்து உறங்குகின்றனர். இவர்கள் ஓய்வெடுக்க அறை இல்லாத காரணத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். 

Kallakurichi

இதுபோன்ற காரணங்களால் நோயாளிகளுடன் உதவிக்கு வருவோர் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தினர் தகுந்த பணிகளை செய்து மக்களுக்கு உதவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். 

Kallakurichi

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு மருத்துவமனைகளில் இதே நிலை தான் தொடருகிறது. நோயாளிகளை காண வருபவர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் ஓய்வெடுக்க குறைந்தபட்ச வசதிகள் கூட இருப்பது இல்லை. மரத்தடி, மருத்துவமனையின் முன் வளாகம் என ஆங்காங்கே தங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.