மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 60 ம் திருமணம் - கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி.!
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1977 - 1978 ம் ஆண்டு படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் இன்று பள்ளியில் சந்திக்க ஏற்பாடுகள் நடந்தது. இந்த பள்ளியில் 1977ல் மாணவர்களாக இருந்தவர்கள் இன்று சுயதொழில், அரசுப்பணி, தொழிலதிபர்கள் என வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள்.
இவர்களின் முகவரிகளை ஒருங்கிணைந்து 108 பேரின் விலாசங்கள் கண்டறியப்பட்டு, அனைவருக்கும் 60 ம் திருமணம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்தன. நேற்று தங்களின் குடும்பத்தாருடன் கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்திற்கு வருகை தந்த 108 பேருக்கும் 60ம் திருமணம் நடைபெற்றது.