பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இந்திய வரலாற்றில் முதல் முறையாக புல்லுக்கு இடம்கொடுத்து மின்கம்பத்தை சுற்றி தார் சாலை... உளுந்தூர்பேட்டையில் சம்பவம்.!
முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி என்பதை போல, மின்கம்பத்தின் புற்கள் வளர இடம்கொடுத்தார் என்ற புதுமொழி கிடைக்கும் அளவு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சமீபமாகவே சாலைப்பணிகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், சாலையின் நடுவே இருக்கும் வாகனங்களை அகற்றாமல் அதனுடன் சேர்த்து சாலையை அமைத்த செயல்கள் நடந்து வந்தன. இன்னும் சில இடங்களில் சாலை ஓரத்தில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றாமல் பணிகள் நடந்தன.
இதுகுறித்த சம்பவங்கள் செய்தியாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதனைப்போன்ற சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - விருத்தாச்சலம் சாலையில் உள்ள மீனாட்சி நகரில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.
அங்கு சாலைக்கு நடுவே மின்கம்பம் இருந்த நிலையில், அதனை அகற்றாமல் தார் சாலை போடப்பட்டுள்ளது. மேலும், மின்கம்பத்தை சுற்றி இருந்த புற்கள் கூட அகற்றப்படாமல், அதற்கு எவ்வித சேதாரமும் இன்றி புதிய தார் சாலையை அமைத்துள்ளனர்.
இதனைக்கண்ட பலரும் வார்டு கவுன்சிலர் மற்றும் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கலாய்த்து வருகின்றனர். ஆனால், தார் சாலைக்கு நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும். அதன் திட்டம் பரிசீலனையில் இருக்கும். அதற்குள் சாலையை அமைத்திருப்பார்கள் என்று ஒருசிலர் குரல் கொடுக்கின்றனர்.