தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பிரச்சாரத்தில் கமல்ஹாசனை கோவை பாஷையில் பேச சொன்ன தொண்டர்.! - ஆவேசத்தில் கொந்தளித்த கமல்.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கோவை பீளமேட்டில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் அவரை கோவை பாஷையில் பேசுமாறு கேட்டுள்ளார். இதற்கு ஆவேசமாக பதிலளித்த கமல், தான் நடிக்க வரவில்லை என்றும் மக்களின் எதிர்காலத்தை பேச வந்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், 40 வருடங்களாக தமிழகத்தில் மதுபானத்தை பழக்கிவிட்டார்கள். அதனால்தான் பலருக்கு ரத்தத்தில் ஆல்கஹால் ஓடுகிறது. எனவே முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 5,000 மதுபான கடைகளை குறைத்து, அந்த பகுதிக்கு அருகில் மனோதத்துவ மருத்துவர் இருக்கும் மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.