தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மயிரிழை கூட பயம் கிடையாது.! ஆவேசத்துடன் பொங்கியெழுந்த கமல்!! தீயாய் பரவும் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!
சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ என்ற இளம்பெண். அவர் கனடா செல்வதற்காக தேர்வுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது. பள்ளிக்கரணை பகுதியில் சாலையின் மீடியன் பகுதியில் வைக்கபட்டிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர் அவர் மீது விழுந்தது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் சுபஸ்ரீ உயிரிழந்தார். தங்களது ஒரே மகளை இழந்து சுபஸ்ரீயின் குடும்பத்தார்கள் கதறி துடித்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆவேசமாக வெளியிட்டுளளார். அதில் வாழவேண்டிய பிள்ளைகளுடைய மரண செய்தியை பெற்றவர்களிடம் சொல்வதுதான் உலகத்தில் மிக கொடுமையான விஷயம். சுபஸ்ரீ மரண செய்தி அப்படிதான்.
பல ரகுக்களும், சுபஸ்ரீகளும் அரசாங்கத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டுள்ளனர். அலட்சிய அதிகாரிகள், அரைவேக்காட்டு அரசியல்வாதிகள்தான் இதற்கு காரணம். இந்த மாதிரி ஆட்கள் மீது மயிரிழை கூட பயம், மரியாதை கிடையாது. உங்களுக்கு பயம் இருந்தால் என் கையை பிடித்துக் கொள்ளுங்கள். மக்கள் நீதி மய்யம் உங்கள் சார்பாக, அந்த தவறுகளை தட்டிக் கேட்டு, தீர்வும் தேடித் தர முற்படும் என மிகவும் ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக
— Kamal Haasan (@ikamalhaasan) September 20, 2019
மாற வேண்டும். pic.twitter.com/RQgaiORiHc