தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கொரோனா சிகிச்சை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி.!
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து 2வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று மட்டும் 31,892 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 288 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 5,074 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான பணிகளை ஆய்வு செய்தார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி.
இந்நிகழ்வில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமிகு.கீதா ஜீவன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (2/2) pic.twitter.com/7feAMuApCi
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 15, 2021
அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதுதொடர்பான தகவல்களை வெளியிட்ட கனிமொழி, முன்களப்பணியாளர்களாக இருக்கும் ஊடக நண்பர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.