#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன.! தந்தையின் நினைவுகளை பகிர்ந்த கனிமொழி.!
திமுகவின் தலைவராக தனது இறுதிநாள் வரை பதவி வகித்த கருணாநிதி, தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஆதிக்கம் மிக்க நபராகவே திகழ்ந்தார். சமூக நீதியை நிலை நிறுத்த அவர் முன்னெடுத்த பல அரசு திட்டங்களுக்காக, இன்றளவும் நினைவில் கொள்ளப்படுகிறார் திமுக முன்னாள் தலைவரான கருணாநிதி. இன்று கலைஞர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாள்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோரும், கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும்
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 2, 2021
அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்
அவை நினைவுகளால்
நிரம்பி வழிகின்றன.#HBDKalaignar98#kalaingarforever pic.twitter.com/vax3teQhNX
இந்நிலையில் கருணாநிதியின் மகளும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தையின் நினைவலைகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச் செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.