கனியாமூர் பள்ளி மாணவியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுமா?!.: பதட்டத்தை தணிக்க போலீஸ் குவிப்பு..!



kaniyamur-school-girls-funeral-will-be-held-today

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் கடந்த 12ஆம் தேதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கூறி அவரது உடலை பெற்றுக் கொள்ளாமல் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் கடந்த 17ஆம் தேதி அந்த மாணவி படித்த பள்ளி முழுவதும் சூரையாடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் மாணவியன் உடல் இரண்டு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது, இருந்தும் இதுவரை அவரது உடலை பெற்றோர் வாங்கிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் அவரது பெற்றோர்கள் இன்று அந்த மாணவன் உடலை பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுஙிறது. அவரது சொந்த கிராமமான பெரியநாயக்கனூர் கிராமத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என்பதால், இறுதி சடங்கில் அவரது உறவினர்களும் பொதுமக்களும் அமைதியாக கலந்து கொள்ளலாம் என்றும், மேலும் தேவையற்ற இடங்களில் கூட்டம் கூடக்கூடாது, தேவையில்லாத வதந்திகளை பரப்ப கூடாது, என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பெரிய நெசலூர் கிராமத்தை சுற்றி 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 400 க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் இறுதி சடங்கு நடைபெற அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பாதுகாப்பையும் காவல்துறையினர் செய்துள்ள்ளனர். எனவே இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் கூறியுள்ளார்.

அந்த கிராமத்திற்கு வரும், அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படும். அந்த வாகனத்தில் யார் வருகிறார்கள் என்ற குறிப்பு எடுக்கப்படுகிறது. வாகன பதிவு எண் பதிவு செய்ய செய்யப்படுகிறது. இந்நிலையில் பெரிய நெசலூர் கிராமம் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.