மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட கடவுளே.. கார் மீது அதிவேகத்தில் மோதிய லாரி.. காரில் இருந்தவர்கள் சரிந்து விழும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. திருவட்டார் பகுதியைச் சேர்ந்த சகாயதாஸ் என்பது நாகர்கோவிலில் உள்ள தேவாலயத்திற்கு சாமி கும்பிடுவதற்காக தனது குடும்பத்தினர் என 8 பேருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் சென்ற கார் சாமியார்மடம் என்ற பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று காரின் ஒருபுரத்தை வேகமாக உரசி நிற்காமல் சென்றுள்ளது. லாரி மோதிய வேகத்தில் காரின் அனைத்து பாகங்களும் உடைந்து காரில் இருந்தவர்கள் வெளியே விழும் காட்சிகள் பார்ப்போரை பதறவைக்கும் விதமாக உள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேரும் படுகாயமடைந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் விபத்து நடந்த காட்சிகள் பதிவாகியிருந்தநிலையில் தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது.
Credits: tamil.news18.com