மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எக்குத்தப்பாக வந்து சிக்கிக்கொண்ட நாய்.. உயிர்காத்த தெய்வங்களாக தீயணைப்பு படையினர்.!
உணவை தேடி வீட்டிற்குள் வந்து வெளியே செல்ல இயலாமல் தவித்த தாய் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம், லட்சுமிபுரம் பகுதியில் தெருநாய் ஒன்று பிரதாப் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்து வெளியே செல்ல முயற்சித்த போது வீட்டின் சுவற்று துளையை பார்த்துள்ளது.
அந்த துளையின் வழியே சென்றுவிடலாம் என்று எண்ணிய நாய் தலையை நுழைத்து சிக்கிக்கொண்டது. இதனால் முன்னும் செல்ல இயலாமல், பின்னும் செல்ல இயலாமல் தத்தளித்துள்ளது. அதன் முயற்சி தோல்வியை தழுவி இரத்தம் வழிந்துள்ளது.
இதனால் இரவு முழுவதும் பரிதவித்த நாயை காலையில் பிரதாப் கண்டுள்ளார். அவரால் நாயை மீட்க இயலவில்லை என்பதால், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஒருமணிநேரம் போராடி நாயை மீட்டனர்.