Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
2 வருடமாக பெண் சிறைவைத்து கற்பழிப்பு.. நண்பன் பெண்ணுக்கு இழைத்த பெருந்துரோகம்.. பகிரங்க மிரட்டல்.!
பெண்ணை வீட்டு சிறையில் வைத்து நண்பனே கற்பழித்த கொடூரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நண்பன் பிறருடன் பெண்ணை உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதால் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், கங்கமனக்குடி பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியே வாழ்ந்து வரும் நிலையில், ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.
27 வயது இளம்பெண்ணின் தாயாரும் மகள் மற்றும் பேரப்பிள்ளையுடன் இருந்த நிலையில், கடந்த 10 வருடத்திற்கு முன்னதாக பெண்மணிக்கு ஒருவருடன் நட்பு பழக்கம் இருந்துள்ளது. அவருடன் பெண் நட்புடன் பழகி வந்த நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக இளம்பெண்ணை அவரின் நண்பர் எருசக்கட்டா பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இளம்பெண்ணை வீட்டிலேயே சிறைவைத்து கற்பழித்து வந்துள்ளார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விடுவித்த நிலையில், மீண்டும் இளம்பெண்ணுக்கு தொடர்பு கொண்டு எனக்கு கடன் உள்ளது. கடனை அடைக்க என் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும்.
அதற்கு மறுத்தால் நான் உன்னை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை ஒன்றொன்றாக வெளியிடுவேன் என்று மிரட்டி இருக்கிறான். இதனால் பயந்துபோன பெண்மணி காவல் நிலையத்தில் நண்பர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார்.